அபிவிருத்தி விசேட ஒழுங்கு விதிச்சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், முதலமைச்சர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.

இந்த விசேட சந்திப்பு நாளைய தினம் பிற்பகல் வேளையில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாண முதலமைச்சர்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடலுக்காக, அலரி மாளிகைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அபிவிருத்தி விசேட ஒழுங்கு விதிச்சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

முதலமைச்சர்களின் அதிகாரங்கள் எதுவும் குறைக்கப்படாது எனவும் அரசாங்கத்தின் அதிகாரங்களுக்குள் முதலமைச்சர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர் என பிரதமர் தெளிவுபடுத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரும் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.