வடக்கு மாகாண விவசாய அமைச்சில் 203
பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றது என வடமாகாண விவசாய இலாகாக்குரிய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்றைய தினம் வரவு செலவு வாதத்தின் போது உரையற்றும்போது குறிப்பிட்டார்.
அதாவது வடமாகாண விவசாய திணைக்களத்திற்குஅனுமதிக்கப்பட்ட ஆளணியினர் 607 ஆனால் சேவையாற்றுபவர் 404 ஆகும். மிகுதி203 ஆளணியினர் வெற்றிடமாகவுள்ளன.
இதனால் விவசாய இலாக வினைத்திறன் கொள்ளமுடியாமல் உள்ளதாம்.
அதாவது
♦இலங்கை விவசாய சேவைத்தரத்தினரில் 17 வெற்றிடங்கள் உள்ளன.
இதில் மாகாண விவசாயத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்பதவிக்கு அங்கீகாரம்உள்ளஆளணி 14 ஆனால் எவருமே நியமனம் பெறவில்லை.பிரதிப் பணிப்பாளர்களுக்கான அங்கீகாரம் உள்ள ஆளணி 06 ஆகும் இதில் 04 பேர்களே சேவையாற்றுகின்றனர் வெற்றிடம் 02.
கிளி மாவட்டப் பிரதி விவசாயப்பணிப்பாளருக்கான ஆளணி நிரப்ப்பபடாமல் உள்ளது.(ஒப்பந்த அடிப்படையில்தான் பணிபுரிகின்றார்)
மேலதிகமாகாணவிவசாயப் பணிப்பாளர்பதவி ஒன்றாக இருந்தபோதும் ஒருவரும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாகவே உள்ளதாம்.
இலங்கைவிவசாய சேவைத் தரத்தில் மொத்தமாக24ஆளணியினர் இருக்கவேண்டிய நிலையில் தற்போது 05 பேர்களே சேவையாற்றுகின்றனர்.வெற்றிடமாக19ஆளணி உள்ளது.இவர்களின் வேலைகளையும் சேர்த்து சேவையாற்றும் ஐந்து ஆளணியினரே செய்வதால் வேலைப்பளூ கூடுதலாக காணப்படுகின்றதாம்.

♦விவசாயமபாதனாசிரியர்கள் ஆளணியின் வெற்றிடம்58 ஆகவுள்ளது.
இவர்கள் விவசாயிகளுடன் நேரடியான தொடர்புகளைப் பேனும் அதிகாரியினர்.இவர்களின் அனுமதிக்கப்பட்ட ஆளணியினர் தொகை 161ஆகும். இதில் பணிபுரிவோர் தொகை103ஆகும் .வெற்றிடமாக58உள்ளன. அதாவது இப் பணி நிலைக்கு தகுதியானவர்கள் இல்லாமையால் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளதால் இப்பதவி நிலை வெற்றிடமாகவே காணப்படகின்றது.
♦தொழில் நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்)ஆளணியின் வெற்றிடம் 110 ஆகவுள்ளது.
அதாவது இப்பதவியின் அனுமதிக்கப்பட்ட ஆளணி 140ஆகும். தற்போது 30 உத்தியோகத்தர்களே கடமையாற்றுகின்றனர்.வெற்றிடமாக 110ஆளணி உள்ளன.
♦அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆளணியினர் வெற்றிடம் 16 ஆகவுள்ளது.
அதாவது அனுமதிக்கப்பட்ட ஆளணியின்அளவு 65 ஆகும் 49ஆளணியினர் பணியாற்றுகின்றனர்.வெற்றிடமாக16 ஆளணியுள்ளன.
என வடமாகாண விவசாய இலகாவுக்குரிய அமைச்சர் வடமாகாண சபையில் கூறினார் .