தீவகத்தில் உள்ள ஓரளவு வசதியானவர்களும் அரச உத்தியோகத்தர்களும் தமது பிள்ளைகளை யாழ்ப்பாணத்திலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்க அனுப்புவதனால் திவகத்தில கல்வி கல்விப் பெறுபேற்றில் தாக்கத்தை ஏற்படுத்தவாக முன்பு பார்த்தோம். இதற்கான காரணமாக தீவகத்தில் உள்ள பாடசாலைகளில் தேவையான பௌதீக வளங்களும் ஆசிரியர்களும் காணப்படாமையுமாகும். எனவே அப்பாடசாலைகளுக்குத்; தேவையான பௌதீக வளங்களைப் பெற்றுக் கொடுக்க வடமாகாணக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தல் அவசியமானதாகும். ஆனால் அனைத்து பௌதீக வளங்களையும் வடமாகாணக் கல்வி அமைச்சினால் உடனடியாக வழங்குதல் சாத்தியமற்றது. தீவக அபிவிருத்தி ஒன்றியம், பூமிப் பந்தின் பல்வேறு இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தீவகப் பாடசாலைகளின் பழைய மாணவர் ஒன்றியங்கள் போன்றவை தற்போது இப்பிரதேசப் பாடசாலைகளுக்கு பௌதீக வளங்களை வழங்கி வருகின்றன. இவை போதுமானதல்ல. எனவே; இவ் அமைப்புக்கள மேலும் தேவையான பௌதீக வளங்களை வழங்க முன்வருதல் அவசியமானதாகும்.

 

தீவகத்தில் பல்வேறு பாடங்களுக்கு பொருத்தமான ஆசியர்கள் இல்லாதுள்ளனர். பற்றாக்குறையாக உள்ள ஆங்கில பாட ஆசிரியர்களையும் ஏனைய பாட ஆசிரியர்களையும் உடனடியாக இந்த வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்தல் மிகவும் அவசியமாகும்.

 

மகாணக் கல்வித் திணைக்களமானது சீரான இடமாற்றக் கொள்கைகளைப் பயன்படுத்தி ஆசிரியர்களை இடம் மாற்றல், தீவகப் பிரதேசத்தின் உள்ளகப் பகுதிகளில் ஆசிரியர்களின் போக்குவரத்திற்கான வசதிகளை ஏற்படுத்துதல். உரிய காலத்தில் பாடநூல்கள், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி என்பவை பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துதல், உரிய பாடங்களுக்குப் பொருத்தமான ஆசிரிய ஆலோகர்களை நியமித்தல். ஆசிரிய ஆலோசகர்கள் மூலம் வழிகாட்டல், மேற்பார்வை, பின்னூட்டல் போன்றவற்றிற்கு முக்கியத்துவமளித்தல் போன்றவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

 

வட மாகாணக் கல்வித் திணைக்களமானது தீவகப் பிரதேசத்தில் மாணவரின் பெறுபேறுகள் தொடர்ச்சியாக வீழச்சியடைந்து வருவதற்கான காரணங்களை அறிவதற்கு ஆய்வு முயற்சிகளில் ஈடுபடல் காலத்தின் தேவையாகும் என்பதனை வலியுறுத்த வேண்டியுள்ளது.