வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று(23.12.2016) ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வு டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிறுவனத்தின் இணைப்பாளர் ரவீந்திர டீ சில்வாவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் கிராம மட்ட குழுக்களைச் சேர்ந்த 150 வரையிலானோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைப் பயன்படுத்தி மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள், நலன்கள் பற்றி இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.மேலும், நிகழ்வில் வவுனியா மாவட்ட உதவி பிரதேச செயலாளர் சாரதா அஞ்சலி கர்ணன், டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எஸ்.நிசாந்தன் ஆகிய பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.