யாழ் இந்துக்கல்லூரி அதிபர் திரு ஐ.தயானந்தராஜா அவர்கள் மன்னாரில்
20.12.2015 அனறு நடைபெற்ற நாவலர் விழாவில் வைத்து மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகள் இணையத்தால் “நாவலர் நினைவு விருது” வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். தமிழறிஞர், நாவலர், தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் இவ்விருதினை வழங்கி கெளரவித்தார். மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியின் அதிபராக 27 ஆண்டுகள் அர்ப்பணிப்பு மிக்க சேவையையும் மன்னார் மாவட்டத்தின் சைவ தமிழ் வளர்ச்சிக்காக சீரிய பணியாற்றியமையையும் கெளரவித்தே அதிபர் ஐ.தயானந்தராஜாவிற்கு இவ்விருது வழங்கப்பட்டது.மன்னார் பிரதேச செயலாளர் சு.வசந்தகுமாரும் மன்னாரின் முக்கிய பிரமுகர்களும் கெளரவிப்பு நிகழ்வின்போது பிரசன்னமாயிருந்தனர்.