அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய சபை அமர்வில் இது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
அபிவிருத்தி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலமானது மாகாணங்களின் அதிகாரங்களை பறிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இதனை வடமாகாண சபை எதிர்ப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி இந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் மாகாண சபை அமர்வுக்கு மத்தியில் இதனை எமது செய்திச் சேவையிடம் குறுஞ் செய்தியினூடாக உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.
இதன்போது அபிவிருத்தி சிறப்பு விதிமுறைகள் சட்டமூலம் தொடர்பில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண முலமைச்சர் இசுறு தேவப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சந்திப்புக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில், குறித்த சட்டமூலம் நேற்று ஊவா மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தோல்வியடைந்தது.
சட்டமூலத்துக்கு எதிராக 13 பேரும், ஆதரவாக 9 பேரும் வாக்களித்திருந்தனர்