கொழும்பிலிருந்து காலிக்கு பயணித்த புகையிரதங்களில் நேற்று ஒரே நாளில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு இன்றி பயணித்த குற்றத்திற்காக இவர்களை நேற்று (22) கைது செய்துள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 10 பெண்களும், 3 வியாபாரிகளும் உள்ளடங்குவதாக மேலும் கூறியுள்ளனர்.

இவர்களில், 75 பேரிடமிருந்து தலா 3,050 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.