ஆஸ்திரேலியா 60 ரன்னில் ஆல் அவுட்: பாண்டிங், வார்னே கடும் விமர்சனம்…

11836888_1040453242640834_376837813361562554_n

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்தின் அபார பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 18.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்களில் சுருண்டு பரிதாபத்திற்குள்ளானது.

இந்த மோசமான ஆட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள வார்னே “ டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஆட்ட நுட்பம், அடிப்படைகளை சரியாக பின்பற்றுவது மற்றும் கடைசி வரை போராடுவதும் ஆகும், ஆனால் ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலிய அணியின் பலகீனத்தை வெளிப்படுத்திவிட்டார். ஆஸ்திரேலியா இன்னும் சிறப்பான தற்காப்பு மற்றும் சிறந்த தொழில் நுட்பத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்” என கூறினார்.

முன்னாள் கேப்டன் பாண்டிங் “ நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுதுவது என்பது எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டுவது மட்டும் இல்லை. தேவையான போது பந்துகளை அடிக்காமல் விடுவதும் கூட நேர்மறையான ஆட்டம் தான். ஒரு போட்டியை எப்படி எதிர்க்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்களிடம் அந்த தெளிவை பார்க்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்