வர்த்தகர்கள் ரூ.2 லட்சத்துக்கும் மேல் ரொக்கத்தின் மூலமாக வர்த்தகம் செய்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.

வருமான வரி விதிகள் 1962-ல் விதி 114-இ குறித்து பல்வேறு சந் தேகங்கள் வருமான வரித்துறைக்கு அனுப்பப்பட்டன. அதிலும் குறிப்பாக ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய் மேல் வர்த்தகம் செய்தால் அந்த விவரத்தை வருமான வரித்துறைக்கு சமர்பிக்க வேண்டுமா என்பது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்த சந்தேகங்களை தெளிவு படுத்தும் வகையில் மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் (சிபிடிடி) அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளது. “விதி 114, உட்பிரிவு 3-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பரிவர்த்தனைகள் அறிக் கையை சமர்பிக்கும் போது ஒரே பரிவர்த்தனையில் 2 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்தால் அதற்குரிய ரசீதை சமர்பிக்க வேண்டும்’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.