வாழைச்சேனை பிரதேச மக்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள்

பிரதி அமைச்சர் அமீர் அலியால் வழங்கி வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வாழைச்சேனை(கோரளைப்பற்று) பிரதேசத்திற்கு உட்பட்ட வறிய மக்களை இணம்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள், கோழிகள், யுவதிகளுக்கான தையல் இயந்திரம் மற்றும் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர், உதவி திட்ட பணிப்பாளர், செயலக அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.