கடந்த 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட

உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட முள்ளியவளை நெடுங்கேணி வீதியிலுள்ள கயட்டை பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது

நினைவேந்தல் நிகழ்வுகள் 2016.12.26 மாலை 4.30 மணிக்கு கயட்டை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது எனவும் இங்கு புதைக்கப்பட்டவர்களின் உற்றார் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரையும் கலந்துகொண்டு எம் உறவுகளுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்துமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா அழைப்பு விடுத்துள்ளார்.