அன்று 2004/12/26 ஞாயிற்றுக் கிழமை காலை கடற்கரையோர கிராமங்கள் மகிழ்ச்சியில் காலம் கடந்துகொண்டிருந்து.
நேரமோ காலை9.25மணியிருக்கும் சத்தமின்றி திடிரென கடல் அலைகள் பேரலையாக எழுந்து ஊருக்குள் புகுந்தது
எல்லாமே ஒருசில நிமிடங்களில் முடிந்தது.ஆம் அழகிய கரையோர கிராமங்கள் அடியோடு அழி்ந்து அலங்கோலமானது .விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.பலர் காணாமல் போனார்கள் .பலர் உடல் மற்றும் உளக்காயங்களுக்குள்ளானர்கள் .பல குடும்பங்கள் இல்லாமலே ஆக்கப்பட்டது.பலகுடும்ப உறவுகள் அனாதைகள் ஆகினார்கள்.
இவற்றை விட பலாயிரக் கணக்கானவர்கள் இல்லிடங்கள் மற்றும் சொத்துக்கள் உடமைகள் என பலதையும் இழந்து நடைப்பிணங்கள் போன்று ஆயினர்.இப் பேரவலம் மனித இனவரலாற்றில் கண்டபேரவலமாக பதிவிடப்பட்டது.


சுமத்திராவில் காலை 6.58மணியளவில் 9.1ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு காரனமாக இப் ஆழிப்பேரலை ஏற்பட்டது. இதன் கோரத் தாண்டவத்தினால் 14 நாடுகளில் பேரழிவுகள் இடம் பெற்றன. இப் பேரலை சுமார் இரண்டுமணிநேரத்தில் 1600 கிலோமிற்றர் பயணித்து இலங்கையை காலை 9.25மணியளவில் பாரிய அழிவை ஏற்படுத்தியது.
இப்பேரவலத்தால் 280000வரையான மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.2500000 வரையான மக்கள அகதிகள் ஆக்கப்பட்டு இடம்பேர்ந்தோர்முகாங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் பாதுகாப்புக்காக தஞ்சமைடைந்தனர்.
ஆழிப்பேரலையால் 14 நாடுகளிலும் பல மில்லியன் கோடி டொலர்கள் அழிவேற்பட்டதுடன் பல தொழில்த்துறைகளும்அழிந்தன.அதாவது கடற்றொழில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.அடுத்ததாக சுற்றுலாத்துறை மற்றும் துறைமுக கட்டுமானங்கள் பலதும் அடியோடு அழிந்தன அல்லது செயலிழந்தது.
இவற்றில் இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பில் கரையோரத்தில் இருந்த தொடரூந்து சேவை முற்றாக பாதிக்கப்பட்டது.அதாவது 69 தொடரூந்து நிலையங்களும்1615கிலோமிற்றர் துர தண்டவாளப் பதையும் அழிந்து நட்டமேற்பட்டதுடன் தொடரூந்துகளும் அதன் பெட்டிகளும் அலையால் அடித்துச் செல்லப்பட்டன.
இலங்கையில் முதலில் காலிபிரதேசத்தையும் பேரூவளைப்பிரதேசத்தையும்அதன் பின்னர்தான் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளையும் தாக்கியது.
இவ்அனர்த்தனம் நடந்தபின்னர் 2005ம்ஆண்டின்கணக்கெடுப்பின்படி
சாவடைந்தோர் 36603 பேர்.
நேரடியாக பாதிக்கபபட்ட மக்கள் சுமார் 800000 பேர் .
இடிந்து அழிந்த கட்டடங்களின் எண்ணிக்கை 90000 (அண்ணளவாக ) ..


இலங்கையில் 12 கரையோர மாவட்டங்கள்பாதிப்புக்குள்ளானது.இதில் கூடிய மனிதஉயிர்கள் காவு கொண்ட மாவட்டம் அம்பாறை மாவட்டம்இங்கு 10436பேர் காவு கொள்ளப்பட்டனர்.வடகிழக்கு மாகாணங்களைப்பொறுத்த மட்டில் அம்பாறையிலேயே கூடுதலான மனதஉயிர் காவுகொள்ளப்பட்டது.
அடுத்ததக முல்லைத்தீவு மாவட்டத்தில் 3000பேர் காவுகொள்ளப்பட்டனர்.
அடுத்ததாக மட்டக்களப்பு மவட்டத்தில் 2794பேர்கள்கவுகொள்ளப்பட்டனர்.யாழ் மாவட்டத்தில் 2640பேர்களும் திருகோணாமலை மாவட்டத்தில் 1077பேர்களும் கிளிநொச்சிமாவட்டத்தில்560பேர்களுமாக வடகிழக்கில் 20507பேர்கள் ஆழிபேரவலத்தின் கோரத் தாண்டவத்தினால்காவுகொள்ளப்பட்டனர் என்பது நிஜம்.
இலங்கையில் 182கல்விச்சாலைகள் அழிந்துள்ளன.
உலக வங்கியின் ஆய்வின் படி 150000பேர் தொழில்களை இழந்துகாணப்பட்டனர் இதில் மீன்பிடித்துறையே கூடுதலாக பாதிக்கப்பட்டது. இவ் ஆழிப்பேரவலத்தின்ஊழித்தாண்டவத்தின் வடுக்களை இன்றும் கரையோரவாழ் மனிதர்களிடம் பார்க்கலாம்
ஆழிப்பேரவலம்என்பது தமிழ் வரலாற்று நூலான(ஐம்பெரும் காப்பியம்) சிலப்பதிகாரத்திலுள்ளது .அதாவது கடல்கோள் வந்ததால் குமரிக்கண்டம் என்ற பரந்ததேசம்கடல்கோளினால்அழிவடைந்ததாக காப்பியம் கூறுகின்றது.
இன் பின்னர் இவ்ஆழிப்பேரவலம் ஜப்பானின் துறைமுகத்தை தாக்கியது .இதனால் ஜப்பானிய மொழியில் ( 津 波 )டசுனமி என்பது ஆகும் .Tsunami என்பது ஆங்கிலமொழி.
அதாவது ஜப்பானிய மொழியில் துறைமுக அலை அல்லது பெரிய அலை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு 31/05/2006அன்று அமைச்ரவையில்எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக டிசம்பர் மாதம் 26ம் திகதியன்று தேசிய பாதுகாப்பு தினமாக நினைவுகூறப்படுகின்றது.

ஆம் தமிழர்கள் வாழ்வியலில் கடலன்னை பிரிக்கமுடியாத அம்சம் என்பார்கள் .இவ்வளவு அழிவைத் தந்த கடலை யாரும் குற்றம்சாட்டுவதில்லை.அழிவைத்தந்த கடலே தம்மை வாழவைப்பவள் என்பது இவர்களின் நம்பிக்கை.
இன்றைய தினம் ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவம் நடைபெற்று பன்னிரெண்டாவது ஆண்டுஆகும்.