மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு மிரட்டல் -லாரன்ஸ் புகார்

dmr logo
Main Menu
சினிமா செய்திகள்

Advertisement
PrevNext
மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு மிரட்டல் – லாரன்ஸ் புகார்

பதிவு செய்த நாள்: டிச 26,2016 18:02
எழுத்தின் அளவு:
மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு மிரட்டல் வருவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார் ராகவா லாரன்ஸ். லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மொட்ட சிவா கெட்ட சிவா’. சாய்ரமணி இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி செளத்ரி தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கான பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் ஆர்பி சவுத்ரி ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தனர். அதில், மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை ரிலீஸ் செய்ய சிலர் இடையூறு செய்வதோடு, மிரட்டல்களும் விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.