எமது சமுதாயத்தின் இருப்பை பாதுகாத்து தக்கவைக்கும் பாரிய பொறுப்பு இளைஞர் யுவதிகளிடமே

உள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து வெளிநாட்டு மோகம் காரணமாக வெளிநாடுகளை நோக்கி படையெடுப்பதானது, எதற்காக போராடினோம் என்ற கேள்வியை ஏற்படுத்துமென அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் உழவர் ஒன்றிய சனசமூக நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கில் வறுமானம் இன்மை, வாழ்வாதார பிரச்சினை, கணவன்மாரை இழந்தவர்களின் பிரச்சினை, வேலைவாய்ப்பு இன்மை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில், குடிப்பழக்கத்தால் இன்று பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்தார். இவ்வாறான பழக்கங்கள் இறுதியில் தமிழர்களின் கலாசாரத்தை வாள்வெட்டு கலாசாரங்களாக மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.