பாராளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பின் போது நாட்டின் பல பாகங்களிலும் சிறு சிறு அசம்பாவிதங்கள் இடம்பெற்ற போதிலும், எந்தவொரு வாக்கெடுப்பு நிலையத்தினதும் வாக்குகளை ரத்துச் செய்யும் அளவுக்கு பாரிய சட்ட மீறல்கள் எதுவும் இடம்பெறவில்லையென தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்ஜுல கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சிறு சிறு சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் வேறு சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. வேட்பாளருக்காக ஆதரவாளர்கள் பல்வேறு சட்டவிரோதமான உத்திகளை கையாண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட ஆயுதஙங்கள் எங்கு கைப்பற்றப் பட்டன என்பதை கூற மறுத்துவிட்டதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன

Policces-01PoliccesPolicces-04Policces-02