அஜித் நயன்தாராவை பின்பற்றும் ஜெய்!

இந்தி நடிகர்களான ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், அக்சய்குமார் ஆகியோர் அவர்கள் நடித்த இந்தி படங்கள் தமிழ்நாட்டில் வெளியானால் அந்த படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னை வந்து விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டைச்சேர்ந்த சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை. இந்த விசயத்தில் அஜித், நயன்தாரா போன்ற பிரபலமானவர்கள் கலந்து கொள்வதில்லை என்பது பற்றி சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களே அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆனால் பெரிய அளவில் இன்னும் வளராத ஜெய்யும், சமீபகாலமாக அஜித், நயன்தாராவைப்போன்று தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்த சென்னை-28-2 படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ளாத ஜெய், நேற்று அவர் நாயகனாக நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோதும் அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏன் கலந்து கொள்ள வில்லை? என்று மீடியாக்கள் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் டைரக்டர் மகேந்திரன் ராஜாமணியிடம் கேட்டபோது, ஜெய் இந்த விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணம், அவர் லண்டனில் இருக்கிறார். அதனால்தான் கலந்து கொள்வதில்லை என்று சிரித்தபடியே சொல்லி சமாளித்தார்.