சமஷ்டி ஒருபோதும் இல்லை புதிய அரசியலமைப்பு நிறைவேற்றத்திற்கு 20வது சீர்திருத்தம்

Home featured
FEATUREDஉள்ளூர் செய்தி
சமஷ்டி ஒரு போதும் இல்லை: புதிய அரசியலமைப்பு நிறைவேற்றத்திற்கு 20 ஆவது சீர்திருத்தம்

Dec 28, 2016
Facebook

நாட்டில் புதிதாக கொண்டுவரப்படும் அரசியலமைப்பின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ பௌத்த மதத்திற்கோ ஒருபோதும் பாதிப்பு ஏற்படமாட்டாது.

அதுமட்டுமன்றி சமஸ்டி முறையை உருவாக்கி நாட்டை பிளவடையச் செய்யும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை என சமூக சேவைகள் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் நேற்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

எதிர்காலங்களில் வரும் பொதுத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஆகியவற்றை புதிய முறையான கலப்பு தேர்தல் முறையிலேயே நடத்துவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகின்றோம்.

இதற்கு 20ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் இன்றியமையாத ஒன்றாகும்.

இதன் காரணமாக அடுத்து வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் எம்முடன் சேராமல் நமது அரசாங்கத்தை விமர்சனம் செய்து வரும் பலர் இன்று எம்மோடு இணைந்து செயற்படுவதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய அரசியலமைப்பினை பொது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதுடன் எதிர்வரும் தேர்தல்களில் சுதந்திரக் கட்சிக்கு அமோக வெற்றி கிடைப்பது தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.