யாழில் இருவேறு இடங்களில் நீராடச் சென்ற ஆசிரியரும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கீரிமலை – மாதகல் – 5, கண் கடற்கரையில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் நீரில் மூழ்கி பலியானார்.

யாழ். இளவாலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியரான நகுலன் (வயது – 31) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கியவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் – கந்தரோடைப் பகுதியில் உள்ள பினாக்காய் குளத்தில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அளவெட்டி – அலுக்கை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் சாருஜன் (வயது 9) என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது