யாருமில்லாத வீட்டில் நள்ளிரவில் சத்தம் அச்சத்தில் பிரதேச மக்கள்

முல்லைத்தீவு அம்பலவன்பொக்கனையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு வீடுகள் காணப்படுகின்றன. குறித்த வீட்டில் இருந்தவர்கள் மீள்குடியேற்றத்தின் பின்னர் இதுவரை மீள்திரும்பவில்லை.

அவர்கள் தற்பொழுது எங்கே, அவர்களின் நிலைமைகள் என்ன..? என்பது பற்றியும் இதுவரை தகவல் இல்லை என அந்த ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் குறித்த இரண்டு வீடுகளில் இருந்து இரவு நேரங்களில் உடைப்பதும், வெட்டுவதும் போன்ற சத்தங்கள் வருவதாகவும், சிலவேளை திருடர்களாக கூட இருக்கலாம் என்று ஊர்மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அருகே அம்பலவன் பொக்கனை மகாவித்தியாலயம் இருக்கின்றது. குறித்த பாடசாலை மாணவர்கள் குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு அவ்வழியே செல்வதினால் ஒருவித அச்சம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே குறித்த வீடுகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கிராமசேவையாளரிடம் கூறியபோதும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.