பள்ளமடு விடத்தல்தீவு பகுதி
தமிழர் வரலாற்றில்
தடம்பதித்துச் சென்ற
வன்னி போக்குவரத்துப் பாலம்
நீண்ட தூர பயணம்
உருக்கொண்டு நடனமிடும்
குன்றும் குழியுமான
நெடுந்தூரப் பாதை
நாள் முழுக்க
பயணித்த நினைவு

சிற்றூர்திகளின்
மேல்த் தட்டுக்களிலும்
மண்ணென்ணையுடன்
ஒயில் கலந்து ஓடிய
கரவன் வாகனங்களில்
கிழங்கு அடுக்கப்பட்ட
மனிதர்களாக பயணித்த
ஞாபகங்கள் நினைவு

கதிர்வேலன் அப்புவின்
தட்டி வானின் தட்டில்
தொங்கிய பயணம்
நினைத்தால் இப்பவும்
மனதுக்குள் நிழலாடுகின்றது.
கரைச்சல்ப்பட்டு
பள்ளமடு வந்து
வரிசையில் நின்று
பொடியலின் தடைமுகாமில
பாசுக்கு சீல் குத்திப்போட்டு
தம்பனைக்கு மீண்டும்
தட்டி வானில
தெங்கிக் கொண்டு
மீண்டுமொரு பயணம்
ஞாபகங்கள் நினைவு

தம்பனையினால் ஆமியின்ர தடைமுகாமுக்குப் போக
வரிசையாக போனது ஞாபகம்
அவங்கள் ஆட்களை
எண்ணி எண்ணி
எடுக்க மத்தியானமாகும்
உடல்சோதணை
பெருள் சோதணை
முடியுமட்டும்
மனிசற்ற உயிர்
குலநடுக்கத்தில் ஊசலாடும்
அங்கல பேனால்அரை நிம்மதி
ஞாபகங்கள் நினைவு

வவுனியா மன்னார் போய்
அவசரஅவசரமாக
பொருட்களை வேண்டிக்கொண்டு மூன்றுமணிக்குள்
ஆமிப்போயின்று கடந்து
பொடியலிடன்ட
இடத்துக்க வந்து
பள்ளமடு வர
இருண்டி போயிடும்
இரவு பள்ளமடு லொச்சில்
தங்கி மறுநாள்
காலையில் எழுந்து
ஊர் போய்ச்சேர
இரவாயிரும் .
இப்பிளைப்புத் தான்
பள்ளமடு வியாபாரியின்
வாழ்க்கை
இவ்வாழ்க்கையில்
வறுமை கலந்த
சந்தோசம் இருந்து
என்பதே உண்மை.
அந்த நாட்களின்
நினைவுகளின் நிஜங்கள்
பள்ளபடுவில் நினைவு வருகின்றன