பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்துள்ள பிரமாண்ட ஹாலிவுட் திரைப்படம் அசசீன்ஸ் கிரீட். கேல் பாஸ்பெண்டர், மரியான் காட்லைட், ஜெர்மி அயர்ன்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் குர்சல் இயக்கி உள்ளார். ஜெட் குர்சல் இசை அமைத்துள்ளார், ஆடம் அக்ரபோவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஹீரோ மைக்கேல் ஒரு கொலை குற்றவாளி. அவரை அப்ஸ்ர்கோ என்ற அமைப்பு ஜெயிலிலிருந்து தப்பிக்க வைக்கிறது. காரணம் மைக்கேல் பூர்வ ஜென்மத்தில் டெம்பிளர் ஆர்டர் என்ற ஒரு கொடிய வில்லன் கூட்டத்துடன் மோதிய படைத்தளபதி. இப்போது அந்த கொடி கூட்டம் வேறு பெயரில் மறுபிறவி எடுத்துள்ளது. அவற்றிடமிருந்து உலகை காப்பாற்ற வேண்டுமானால் அது மைக்கேலால் மட்டுமே முடியும். அவர் காப்பாற்றினாரா என்பதுதான் கதை. இதில் ஹீரோவின் பெயர் அசசீன்ஸ். கடந்த 13 மற்றும் 21ந் தேதிகளில் உலக நாடுகளில் வெளிவந்த இந்தப் படம வருகிற 30ந் தேதி இந்தியாவில் வெளிவருகிறது. தமிழில் 2டி மற்றும் 3டி தொழில் நுட்பத்திலும் வெளிவருகிறது.