வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு இன்று தீர்வு கிடைத்திருக்கிறது.

முதலமைச்சரின் கடுமையான அழுத்தம் மற்றும் கல்வியமைச்சருக்கு அவர் எழுதிய அழுத்தமான கடிதம் காரணமாக தடையாக இருந்தவர்கள் நியமனங்களுக்கு இணங்கியிருக்கிறார்கள் என்பதை கல்வியமைச்சின் செயலாளர் திரு.இ.ரவீந்திரன் அவர்கள் உறுதி பட புதிய அதிபர் சங்கத்தினருக்கு கூறியிருக்கிறார்.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் காணப்படும் 207 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஏனையோர் பிரதி மற்றும் உப அதிபர்களாக பாடசாலைகளில் நிலைப்படுத்துமாறு அனுமதி கிடைத்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை வலயக் கல்வி அலுவலங்களில் நியமனக் கடிதங்களை பெற்று பாடசாலை தொடங்கும் போது நியமனக் கடிதத்தில் குறிப்பிட்ட பாடசாலைகளைப் பொறுபேற்குமாறு கல்விச் செயலாளர் திரு.இ.ரவீந்திரன் இன்றுஅதிபர்களுக்கு உறுதியளித்தார்.