டி.எம்.சுவாமிநாதனால் வவுனியாவில் காணி அனுமதிபத்திரம் வழங்கப்பட்டது.

வவுனியா கற்பகபுரம் அதக பாடசாலையில் இன்று 28.12.2016 பிற்பகல் 1.00மணியளவில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் இப்பகுதியில் நீண்டகாலமாக காணி அனுமதிப்பத்திரம் இன்றி வசித்து வந்த 370 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா.உதயராசா, வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் கருணதாசா, வவுனியா இணைப்பாளர் சிவலிங்கம், வவுனியா உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராமசேவையாளர், பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சரின் வருகையினையோட்டி பாடசாலை வளாகத்தினுள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது