ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி நிலோபர் ரஹ்மானி (25). இவர் அமெரிக்க விமானப்படையில் 15 மாதங்கள் பயிற்சி பெற்றார்.

பயிற்சி முடிந்து கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் திரும்பினார். அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் விமானப்படையில் பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைய இருப்பதாக யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் எனக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மேலும் நாட்டை விட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வெளியேறி வருகின்றனர். இக்காரணங்களால் அமெரிக்காவில் தங்க முடிவு செய்து இருக்கிறேன் என்றார்.

இதுகுறித்து ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது ரத்மனோஷ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவரது இந்த முடிவு எதிர்பாராதது. பொறுப்பற்றது. மேலும் வெட்க கேடானது. அவர் 1983-ம் ஆண்டு தேர்வான போது ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி என்ற பெருமை பெற்றார்.

லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்களின் அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் திகழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார். நிலோபர் ரஹ்மானி கடந்த ஆண்டு அமெரிக்க அரசின் பெண்களுக்கான வீர தீர விருது பெற்றார். இவருக்கு தலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இருந்தும் அதை பொருட்படுத்தவில்லை.

TO GO WITH AFGHANISTAN-UNREST-WOMEN-AVIATION BY ANUJ CHOPRA
In a picture taken on April 26, 2015, Afghanistan’s first female pilot Niloofar Rahmani, 23, poses for a photograph alongside a fixed-wing Afghan Air Force aviator aircraft in Kabul. With a hint of swagger in her gait, Afghanistan’s first female pilot since the ouster of the Taliban is defying death threats and archaic gender stereotypes to infiltrate an almost entirely male preserve. AFP PHOTO / SHAH Marai