ஸ்பெயின் நாட்டில் Las Teresitas கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மீது 3 இருக்கைகள் கொண்ட குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Las Teresitas கடற்கரையில் செவ்வாய்க்கிழமை மதியம் ஒரு மணி அளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.

குறித்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டிருந்த 14 வயது சிறுமி மற்றும் ஒரு பெண்மணி, விமானத்தை இயக்கிய நபர் உள்ளிட்ட மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மட்டுமின்றி விபத்தின்போது குறித்த கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

பயணிகள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியிருந்தாலும் விமானிக்கு குறிப்பிடும்படியான காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த 3 பேரும் அருகமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின்போது விமானம் கட்டுப்பாட்டினை இழந்து கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளின் அருகாமையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதனால் அச்சத்தில் அங்கிருந்த பயணிகள் அலறியடித்தபடி சிதறி ஓடியுள்ளனர்.

விமானம் இயந்திர கோளாறு காரணமாக கட்டுப்பாட்டினை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் மற்றும் பொலிசார் சம்பவயிடத்தை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.