கிறிஸ்துமஸ் தினத்தன்று வீடில்லாத ஒரு நபரை தீ வைத்து கொழுத்த முயற்சி செய்ததாக கூறி ஏழு இளம் அகதிகள் மீது ஜெர்மனியில் உள்ள

அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்த அந்த நபர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்ட பிறகு, உடனடியாக ஆறு சந்தேக நபர்கள் போலீசாரிடம் சரணடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்பினார்.
ஜெர்மன் நாட்டினரால், வீடற்ற மக்கள் மீது பெருமளவு தாக்குதல் நடைபெற்றுவருகிறது. பெரும்பாலும் இந்தத் தாக்குதலை நடத்துபவர்கள் தீவிர வலது சாரி செயற்பாட்டாளர்களாக உள்ளனர்.