தமிழ் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய எந்தவிதமான விட்டுகொடுப்புகளுக்கும் இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுதர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை எனவும், மாறாக ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் தொடர்சியாக வலியுறுத்திவருகின்றது.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது.

இதனை தென்னிலங்கை தலைவர்களுடனான அனைத்து சந்திப்புகளின்போதும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறான அரசியல் தீர்வே நிரந்தரமானதாக இருக்கு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.