பாரம்பரியத்தை இழக்கும் காலத்தில் இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் தனது பாரம்பரிய உடையுடன் வேடுவ இனத்தை சார்ந்தவர் கலந்துகொண்ட போது!

என்னுடன் கற்ற சில யாழ்பல்கலைக்கழக மட்டக்களப்பு நண்பர்கள் கற்கைநெறி முடிந்துவரும் போது பட்டத்துடன் யாழ்ப்பாண பேச்சு தமிழையும் சேர்த்து தொற்றி அதை தமது உரையாடல் போது வெளிப்படுத்துவதை அவதானித்தேன்.

அதை போன்று மட்டக்களப்பிலிருந்து பலர் இலங்கையின் வெவ்வேறு மாவட்டங்களில் வாழும் போது தம்மை மட்டக்களப்பு மாவட்டம் என்று சொல்வதற்கு மறைத்து வாழும் ஊரை உரிமை கோரி தமக்கு உரித்தான பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை மறந்த நிலையில் இருப்பவர்கள் மத்தியில் எத்தனை விஞ்ஞான தொழினுட்பம் கூடிய காலத்திலும்

இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் தனது மகனை வழக்கொன்றிலிருந்து பிணை எடுப்பதற்காக வந்த வேடுவ இனத்தை சார்ந்த ஒருவர், தங்களது பாரம்பரிய கோடரியுடனேயே நீதிமன்றத்தில் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.