சுற்றி நின்று கொல்லுகிறான்
சூழ்ந்து நின்று கொழுத்துகிறான்
சற்றேனும் இரக்கமின்றி;ச்
செல்லு குண்டைக் கொட்டுகிறான்
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி    கண்ணீரைச் சொரியுது!

புற்றிலுள்ள பாம்போடு நம்முறவு பதுங்குது!
போக இடம் தெரியாமற் போய் விழுந்து கதறுது!
பெற்றவர்கள் படும் பாட்டைப் பேச முடியல்லை!
பேசாமைப் படுப்பதற்கும் மனசு கே ட்கல்லை!
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி கண்ணீரைச் சொரியுது!

கெட்டவ்ர்கள் பூமியிது!
கேட்பதற்கும் மனுசரில்லை!
சட்டங்களைப் போட்டு எம்மை;ச்
சவமாக மாத்திறார்!
சுட்டெரிக்க நம்ம சனம் சாகுது! ஓன்றும்
செய்ய முடியாமை மனம் வேகுது!
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி கண்ணீரைச் சொரியுது!

கட்டுக்கடங்காது துயர் காட்டுவெள்ளமாகுது
கைகொடுக்கஉலகம்தடைபோடுது!
நித்திரையில் நெஞ்சு கனமாகுது!
விட்டு விடமுடியாது தோழரே! நாங்கள்
விண்ணதிரக் கத்த வேண்டும் தோழரே! உண்மை
வெல்லும்வரை உழைக்க வேண்டும் !தோழரே!