பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் தில்லி

அணியில் இடம்பெற்றுள்ளார் பிரபல வீராங்கனை ஜூவாலா கட்டா. அவர் பேட்மிண்டன் விளையாட்டில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குறித்து கூறியதாவது:

விளையாட்டு அரங்கிலும் அதன் வெளியேயும் என்ன உடை உடுத்துகிறேன் என்பதில் எப்போதும் என் கவனம் இருக்கும். ஆனால் எல்லோரும் அப்படி இருக்கிறார்கள் என்பதும் பேட்மிண்டனில் இதற்கென தனி அடையாளம் கிடைப்பதும் நல்ல விஷயம். இந்த மாற்றத்தை இரு கரங்களாலும் வரவேற்கிறேன். நாம் சமூகவலைத்தளங்களின் தாக்கம் உள்ள காலத்தில் வாழ்க்கிறோம். பளிச் என்று இருப்பது உங்கள் கண்ணில் படும். இந்தியாவில் பேட்மிண்டனுக்குக் கூடுதல் கவனம் கிடைக்க கிளாமர் தேவை. இதன்மூலம் பேட்மிண்டனுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.