கார் டிரைவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக நடிகை ரஷ்மி கவுதம் தெரிவித்துள்ளார்.

ஹோலி தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ரேஷ்மி கவுதம். அவர் தமிழில் கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கன்னட படத்திலும் நடித்துள்ள அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆந்திராவின் கர்னூல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தாராம் ரஷ்மி. இரவு நேரம் என்பதால் அவர் தூங்கிவிட்டார். அப்போது டிரைவர் காரை காட்டுப் பகுதி வழியாக ஓட்டிச் சென்றுள்ளார்.

திடீர் என்று கண் விழித்த ரஷ்மி டிரைவர் எங்கோ செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு டிரைவரோ, இது தான் குறுக்கு வழி என்று கூறியுள்ளார். மேலும் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு ரஷ்மியை அவர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ரஷ்மி தன் மொத்த பலத்தையும் பயன்படுத்தி அவரிடம் போராடி தப்பியோடியுள்ளார்.