அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட சுமார் 196 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி

வைக்கப்பட்டுள்ளன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடியாறு ஆகிய கிராமங்களை சேர்த்த குடும்பங்களுகே இந்த வாழ்வாதார உதவிகள் பிரதேச செயலாளரால் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்குடன் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சு இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட ஒரு கோடியே 96 இலட்சம் ரூபாய் நிதியின் கீழ், ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் மற்றும் விவசாய உபகரணங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.