தமிழ் மக்களின் வரலாறுகளை அழிக்கும் வகையில் வடக்கு கிழக்கில் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கப்படுவதற்கு எதிராக மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு

நடவடிக்கையும் மேற்கொள்ளாமை கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா குறிப்பிட்டார்.
அத்துடன் யுத்ததின் வடுக்கள் வடபகுதி மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்குவதாக அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட இந்துமாமன்ற அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று ஒட்டுசுட்டான் புதுக்குடியிரப்பு மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய பிரதேச செயலகபிரிவுகளை சேர்ந்த இந்துமாமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .

இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, சோழர் காலத்தில் எவ்வாறு தென் இந்தியாவில் அறநெறி வளர்க்கப்பட்டதோ அதேபோன்று வடக்கு கிழக்கிலும் அறநெறி வளர்க்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்