மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு பேரின் மீதும் சிறைச்சாலையில் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வித்தியாவின் படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு கைதிகளையும் நேற்று மாலை தும்பரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்போது அங்கிருந்த மரண தண்டனை கைதிகளால் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவி ஒருவரின் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மேற்கொண்டமை காரணமாக இந்த தாக்குதல் மேற்கொண்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் குறித்த தாக்குதல் சம்பவத்தை தடுத்த சிறைச்சாலை அதிகாரிகள், ஏழு கைதிகளையும் சீ பிரிவு சிறையறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாரிய குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை மற்றும் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 350 சிறைக்கைதிகள் தும்பரை சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.