உலகளவில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர்

உலகளவில் அதிக சம்பளம் பெறுகிற கால்பந்து வீரர் யார் என்று தெரியுமா?

அர்ஜெண்டினா வீரர் கார்லோஸ் டெவெஸ்.

சீன கால்பந்து கிளப்பான சாங்காய் சென்ஹுவாவுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார் கார்லோஸ். இதற்காக அவருக்கு ஒரு சீசனுக்கு 40 மில்லியன் டாலர் அதாவது ரூ. 273 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளது.

அர்ஜெண்டினாவின் போகா ஜூனியர்ஸ் அணியிலிருந்து கார்லோஸ் மாறியுள்ளார். இதையடுத்து கால்பந்து உலகில் அதிக சம்பளம் பெற்ற வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் கார்லோஸ்.