தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 248 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.

351 ஓட்டங்களுடன் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா அணி 406 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு 488 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேத்யூஸ் 58 ஓட்டங்களுடனும், சில்வா 9 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கடைசி ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இலங்கை வெற்றிக்கு 248 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. தென் ஆப்ரிக்கா வெற்றிப்பெற 5 விக்கெட் தேவை.

களத்தில் உள்ள இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பெற செய்வாரா என ரசிகர்கள் எதிர் நோக்கி உள்ளனர்.