அட்லி இயக்கிய முதல் படம் ராஜா ராணி. ஆர்யா, நயன்தாரா நடித்த அந்த படம் மணிரத்னம் இயக்கிய மெளனராகம் பாணியில் இருப்பதாக அப்போது விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து, விஜய் நடித்த தெறி படத்தை அவர் இயக்கியபோது விஜயகாந்தின் சத்ரியன் பாணியில் இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும், அந்த இரண்டு படங்களுமே ஹிட்டடித்ததால் எதிர்மறையான விமர்சனங்கள் அட்லியை பாதிக்கவில்லை. அதனால், மறுபடியும் விஜய்யை இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மேலும், தற்போது அவர் விஜய்யை இயக்கும் படம் எந்த மாதிரியான கதையில் உருவாகிறது என்பது வெளியாகவில்லை. ஆனால் இப்போது அதுகுறித்து விசாரித்தபோது, அந்த படம் ரஜினி- பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் பாணியில் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. அப்படத்தில் ரஜினி-பிரபு இருவரும் அண்ணன் தம்பியாக நடித்தது போன்று இந்த படத்திலும் விஜய் நடிக்கிறாராம். மேலும், அண்ணனாக நடிக்கும் விஜய் 55 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் நடிக்கிறாராம். அதற்காக அவர் தலைமுடியை ஓரளவு வளர்த்து நடிக்கப்போவதாக கூறப்படும் நிலையில், விஜய் நடிக்கும் அந்த முதிர்ச்சியான வேடத்தில்தான் அவருக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.