தீவகப்பகுதியில் அதிகரித்து வரும் கால்நடை களவுகளை கட்டுப்படுத்த இன்றுமுதல் பொலிஸார்,பொது பொதுமக்கள் இணைந்து சுற்று காவல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஊர்காவற்றுறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.ஏ.பி ஜெயசுந்தர தெரிவித்தார் நேற்று வேலணை பிரதேச புத்திஜீவிகள் குழுவினருடன் இடம்பெற்ற கால்நடை களவு தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தீவக பகுதியில் மாடுகளை களவாடும் கும்பல்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன இவற்றை மக்களுடன் இணைந்து கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர் மத அடிப்படையில் மாடுகளை கொல்வது பாவமான செயல் என இந்து மற்றும் பெளத்த மதம் கூறுகின்றது இவ்வாறான பாவ செயல்களை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இச் செயற்பாட்டினை பொலிஸார் இலகுவாக மேற்கொள்வதற்கு பொது மக்களது ஒத்துழைப்பு அவசியம் இதனுடாகவே பொலிஸாரால் கால்நடைகளை பூரணமாக ஒழிக்க முடியும். இச் செயல்திட்டத்தை மேற்கொள்வதற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூடிய பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இன்று முதல் பொது மக்களுடன் இணைந்ததான சுற்று காவல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்