நாடு புலிகளின் கைகளுக்கு சென்று விட்டதாக கூறி கூட்டு எதிர்க்கட்சியினர் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,

பயங்கர குற்றங்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகளை விசாரணை செய்வதற்கு விஷேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

அதுவும் நீதிமன்றத்திற்கு உள்ளேயே இவ்வாறான நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் விடுதலைப்புலிகள் என சந்தேகப்படுகின்றவர்களுக்கு எதிராகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றது.

ஆனாலும் ரவிராஜ் கொலை வழக்கிற்கும் விஷேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். ஆனாலும் அதனை செய்வதில்லை, இது போன்று பல வழக்குகள் காணப்படுகின்றன.

மேலும் பிரதானமான ஊழல்கள் தொடர்பான வழக்குகளுக்கும் விஷேட நீதிமன்றத்தினை அமைத்து முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.