மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் ஊடக அடக்குமுறையை வெளிப்படுத்தும்

வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நாளையதினம்(31) நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள குறித்த ஊடகவியலாளர் சந்திப்பானது நாளை பிற்பகல் 2.30 மணியளவில் மட்டக்களப்பு டெலிக்கொம் வீதியில் உள்ள இணையம் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.