இலங்கையில் சமஸ்டி முறையில் ஆட்சி

நிறுவப்படக் கூடாது எனக் கோரி பிரித்தானியாவில் சில இலங்கையர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய என்ற பெயரில் அரசாங்கம் சமஸ்டி முறையிலான ஆட்சியை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகவும் ஐக்கிய என்ற பெயரில் அரசாங்கம் சமஸ்டி முறையிலான ஆட்சியை அறிமுகம் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் தேவைகளுக்கு அமைய இவ்வாறு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட உள்ளதாகவும் இந்த அரசாங்க ஆட்சியின் கீழ் படையினர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.