பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்து விட்டதாக பரபரப்பு செய்தி வெளியாகி அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது.

டுவிட்டரில் இயங்கி வரும் போலி பிபிசி செய்தி பக்கம் ஒன்று வெளியிட்ட பதிவை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

advertisement
குறித்த பதிவில், ராணி இரண்டாம் எலிசபெத் 90 வயதில் மரணமடைந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது என பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வதந்தி பதிவு டுவிட்டரில் தீயாக பரவ பலர் அபத்தமான பதிவுகளை பதிவிட்டனர்.

செய்தி நிருபர்கள் துக்கம் அனுசரிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்திருந்ததை பார்த்ததாக ஒருவர் பதவிட்டிருந்தார். மற்றொரு நபர், ராணி மரணத்தை அடுத்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியே தொலைக்காட்சி குழுக்களை கண்டதாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், பிபிசி நியூஸ் நிருபர் Rory Cellan-Jones, இது அனைத்தும் வதந்தி என அதிரடியாக நிராகரித்துள்ளார்.

வதந்தி தீயாக பரவ ராணியின் உடல்நலம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ராணி மற்றும் Duke of Edinburgh பயங்கர சளி பிரச்சனையிலிருந்து தொடர்ந்து மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ராணி நலமுடன் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.