பிரித்தானியாவில் கொள்ளையர்கள் இருவர் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் சூப்பர்மார்க்கெட் ஒன்றில் நுழைந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன், Eltham பகுதியில் உள்ள Co-op என்னும் சூப்பர்மார்க்கெட்டிலே இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண சூப்பர்மார்க்கெட்டின் சிசிடிவியில் பதிவான காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

advertisement
குறித்த வீடியோவில், முகமூடி மற்றும் கருப்பு உடை அணிந்து துப்பாக்கி மற்றும் கத்தியுடன் இரண்டு பேர் கடைக்குள் நுழைகின்றனர்.

கத்தி வைத்திருக்கும் நபர் கடையின் பணம் செலுத்தும் இடத்திற்குள் நுழைந்து பெண் ஊழியரை மிரட்டி அங்கிருந்த சிகரெட் பெட்டிகளை எடுத்து ஒரு பையில் போடுகிறார். துப்பாக்கியுடன் இருக்கும் நபர் ஆண் ஊழியரை மிரட்டி பணம் அனைத்தையும் கொள்ளை அடிக்கிறார்.

கடையில் பணம் மற்றும் சிகரெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு 18 முதல் 20 வயது இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடித்த பின் இருவரும் கடையின் வாசலில் தயாராக காத்துக்கொண்டிருந்த காரில் ஏறி தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளையில் கார் ஓட்டுநரும் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இதில் ஊழியர்கள் யாருக்கும் எந்த காயமும் எற்படவில்லை.

தற்போது, வீடியோ வெளியிட்டுள்ள பொலிசார் கொள்ளையர்கள் குறித்த தகவல் ஏதேனும் அறிந்தால் உடனே தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.