முல்லைத்தீவில்காடுகளை பாதுகாக்க வேண்டிய வனவள பாதுகாப்புத் திணைக்களம் முல்லைத்தீவில்

பாரியளவில் காடுகளை அழிப்போரை பாதுகாக்கும் பணியையே செய்து வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மக்கள் அத்தியாவசிய தேவைக்காக ஒரு தடியை கூட வெட்ட முடியாத அளவுக்கு வனவள பாதுகாப்பு திணைக்கள பணியாளர்கள் தடை போடுவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் மாவட்டத்தில் 5 இற்கும் மேற்பட்ட இடங்களில் சட்டத்திற்கு மாறாக மரங்கள் வெட்டப்பட்டு வனவளம் அழிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தள்ளார்.

மரங்களை அழிப்போருக்கு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ள அவர் மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்படும் இடங்கள் மற்றும் அழிக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான ஆதரங்களை திரட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த விரிவான அறிக்கையை 2017 தை மாத முற்பகுதியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு பொதுமக்களின் கையொப்பங்களுடன் நேரிலும் தபால் மூலமாகவும் அனுப்பி வைப்பதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

முள்ளியவளை, குமாரபுரம் (முறிப்பு) பகுதியில் மிக பெறுமதியான காட்டு மரங்களை ஒரு சிலர் தங்கள் சுயலாபங்களுக்காக வெட்டியபோது வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பார்த்து கொண்டிருந்தனர்.

மக்களோடு இணைந்து பெரும் பிரயத்தனங்களின் பின்னர் அந்த காடழிப்பை தடுத்து நிறுத்தினோம். தற்போதும் உடையார்கட்டு, சிறாட்டிகுளம், பனங்காமம்பற்று உள்ளிட்ட மாவட்டத்தில் 5 பிரதான இடங்களில் பெருமளவு காடுகள் கண்மூடித்தனமாக வெட்டி அழிக்கப்பட்டுவருகின்றன எனவும் ரவிகரன் மேலும் தெரிவித்தார்.