சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதற்காக காஜல் அகர்வால் தான் ஒப்புக் கொண்ட

ஒரு படத்தில் இருந்து விலகியதாக இயக்குனர் விநாயக் தெரிவித்துள்ளார்.வி. வி. விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் கைதி எண் 150. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கே கைதி எண் 150. இந்த படம் மூலம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹீரோவாகியுள்ளார் சிரஞ்சீவி.

அனுஷ்கா

சிரஞ்சீவிக்கு ஜோடியாக அனுஷ்காவை தான் தேர்வு செய்தார்களாம். ஆனால் அனுஷ்காவோ பாகுபலி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக இருப்பதால் சிருவுக்கு டேட்ஸ் கொடுக்க முடியவில்லையாம்.

காஜல்

அனுஷ்கா முடியாது என்று கூறிய பிறகே விநாயக் காஜல் அகர்வாலை அணுகி நடிக்குமாறு கேட்டுள்ளார். காஜலும் படுபிசி தான் என்றாலும் சிருவுக்காக தான் ஒப்புக் கொண்ட ஒரு படத்தில் இருந்து விலகி அவருக்கு டேட்ஸ் கொடுத்துள்ளார்.

ராம் சரண் தேஜா

காஜல் அப்பா வயது சிரஞ்சீவியுடன் நடிக்க முதலில் தயங்கியுள்ளார். பின்னர் சிரஞ்சீவியின் மகனும், படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரணின் நட்பை மதித்து நடிக்க ஒப்புக் கொண்டார்.

ரிலீஸ்

கைதி எண் 150 படம் ஜனவரி 13ம் தேதி சங்கராந்தி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. படத்தை பார்த்த சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தில் ராய் லட்சுமி ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். 61 வயதானாலும் சிருவின் ஸ்டைலும், அழகும் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.