பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள

காம்பினஸ் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.

அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கியால் சுட்டவர் தனது முன்னாள் மனைவி பிரிந்து சென்ற கோபத்தில் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்றும், அவரது மனைவியும் இதில் பலியாகி விட்டார் எனவும் சா போலோ மாகாண போலீசார் தெரிவித்தனர்.

எனினும் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாததால் துப்பாக்கிசூடு நடத்தியவர் யார்? இறந்தவர்கள் யார்? என்பது தெரியவில்லை.

இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் 8 வயது மகனும் இறந்து விட்டதாகவும், மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.