முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒப்பாக ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்ட வகை

தொகையற்ற படுகொலைகளை இன்றும் வடக்கு கிழக்கில் முக்கியமாக காணலாம்.

அந்த இரத்தங்கள் இன்னும் காயவில்லை. மக்கள் அழுகுரல்கள் இன்னும் ஓயவில்லை. அதற்குள் ஐக்கிய தேசியக்கட்சியுடன் எப்படி கைகோர்க்க முடிகிறது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன சப்பை கட்டை கட்டினாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

1977ஆம் ஆண்டு போரா சமாதானமாக என்ற தமிழ் மக்களுக்கு எதிரான போர்ப்பிரகடனத்தை வெளியிட்டு தமிழினப்படுகொலையை ஆரம்பித்த ஜே.ஆர்.தொடக்கம் இன்றைய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வரை தமிழின அழிப்புக்களை நான் பட்டியல் இட்டுத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் கிடையாது. இருந்தாலும் படுகொலை விபரங்களை தராவிட்டாலும் எந்த ஆண்டில் எங்கெங்கு படுகொலை நடந்தது என்ற விபரங்களை மட்டும் சுருக்கமாக தருகிறேன்.

இனப்படுகொலைகள் 1977ஆம் ஆண்டு இனப்படுகொலை, 1981ஆம் ஆண்டு இனப்படுகொலை, 1983இனப்படுகொலை, 1990ஆம் ஆண்டு படுகொலைகள் என 91 கிராமங்களில் கூட்டுப்படுகொலைகளை நடத்தி இன அழிப்பை நடத்திய பெருமை ஐக்கிய தேசியக்கட்சியையே சாரும், ஒருபுறத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இனஅழிப்பை செய்து கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி மறு புறத்தில் மிகப்பெரிய சொத்தான யாழ். நூலகத்தையும் அழித்தது. யாழ். நூலகத்தை அழித்து போன்ற கொடுமைக்கு எந்த காலத்திலும் எந்த விதத்திலும் ஐக்கிய தேசியக்கட்சியால் பரிகாரம் செய்து விட முடியாது.

ஒவ்வொரு தமிழனும் இந்த உலகில் இருக்கும் வரை இந்த கொடுமைகளை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி தமிழர்களின் பூர்வீக தாயத்தை சிங்கள தேசமாக மாற்றுவதில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய தேசியக்கட்சிதான்.

1983ஆம் ஆண்டு யூலை 24ஆம் திகதி

யாழ்ப்பாணம் திருநெல்வேலி படுகொலை,

சாம்பல்தோட்ட படுகொலை,(1984)

சுன்னாகம் சந்தை படுகொலை, (1984)

பருத்தித்துறை திக்கம் படுகொலை, (1984)

ஓதியமலை படுகொலை, (1984)

குழுழமுனை படுகொலை, (1984)

செட்டிக்குளம் படுகொலை, (1984)

மணலாறு மற்றும் தென்னமரவாடி படுகொலை, (1984)

மன்னார் முருங்கன் படுகொலை, (1984)

கொக்குளாய் படுகொலை, (1984)

வங்காலை தேவாலயப்படுகொலை, (1986)

முள்ளியவளை படுகொலை (1985)

வட்டக்கண்டல் படுகொலை, (1985)

புதுக்குடியிருப்பு ஜயன்கோவிலடிப்படுகொலை, (1985)

திருமலை படுகொலை (1985)

வல்வெட்டித்துறை படுகொலை( 1985)

குமுதினி படகு படுகொலை (1985)

கிளிவெட்டி படுகொலை (1985)

திரியாய் படுகொலை (1985)

சாம்பல்தீவு படுகொலை (1985)

நிலாவெளி படுகொலை (1985)

பிரமந்தனாறு படுகொலை ( 1985)

கந்தளாய் படுகொலை ( 1985)

மூதூர் கடற்கரைச்சேனை படுகொலை ( 1985)

வயலூர் படுகொலை ( 1985)

பெரியபுல்லுமலை படுகொலை ( 1986)

கிளிநொச்சி ரயில்நிலைய படுகொலை ( 1986)

உடும்பன்குளம் படுகொலை ( 1986)

ஈட்டிமுறிச்சான் படுகொலை ( 1986)

ஆனந்தபுரம் செல்வீச்சில் நடத்தப்பட்ட படுகொலை ( 1986)

மண்டைதீவுக்கடல் படுகொலை (1986)

சேருவில் படுகொலை ( 1986)

தம்பலகாமம் படுகொலை ( 1986)

பரந்தன் விவசாயிகள் படுகொலை ( 1986)

பெருவெளி அகதிகள் முகாம் படுகொலை ( 1986)

தட்டுவான்படுகொலை ( 1986)

மூதூர் மணல்சேனை படுகொலை ( 1986)

அடம்பன் படுகொலை (1986)

பெரிய பண்டிவிரிச்சான் படுகொலை ( 1986)

கொக்கட்டிச்சோலை இறால்பண்ணை படுகொலை(1987)

பட்டித்திடல் படுகொலை (1987)

தோணிதாண்டமடு படுகொலை ( 1987)

அல்வாய் முத்துமாரி அம்மன் செல்வீச்சு படுகொலை ( 1987)

வீரமுனை படுகொலை ( 1990)

கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாம்படுகொலை ( 1990)

சத்துருக்கொண்டான் படுகொலை ( 1990)

சம்மாந்துறை சேவியர்புரம் படுகொலை ( 1990)

சித்தாண்டி படுகொலை (1990)

பரந்தன் சந்தி படுகொலை ( 1990)

பொத்துவில் படுகொலை( 1990)

திராய்கேணி படுகொலை ( 1990)

கல்முனை படுகொலை ( 1990)

துறைநீலாவணை படுகொலை ( 1990)

ஏறாவூர் 5ஆம் குறிச்சி படுகொலை (ஓகஸ்ட்,1990)

ஏறாவூர் படுகொலை ( ஒக்டோபர் 1990)

கோரவெளி ஈச்சையடித்தீவு படுகொலை ( 1990)

நெல்லியடி சந்தைப்படுகொலை (1990)

நற்பிட்டிமுனை படுகொலை,( 1990)

ஒட்டிசுட்டான் படுகொலை ( 1990)

புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை ( 1991)

கொக்கட்டிச்சோலை படுகொலை( 1991)

புல்லுமலை படுகொலை ( 1990)

கிண்ணயடி படுகொலை ( 1991)

கரப்பொழை முத்துக்கல் படுகொலை ( 1992)

தெல்லிப்பளை ஆலயப்படுகொலை ( 1992)

மைலந்தனை படுகொலை ( 1992)

கிளாலிப்படுகொலை ( 1993)

மாத்தளன் படுகொலை ( 1993)

கொக்குவில் ஆலயப்படுகொலை ( 1993)

குருநகர் தேவாலயப்படுகொலை ( 1993)

சுண்டிக்குளம் மீனவர் படுகொலை( 1993)

இதில் உதிரிகளாக படுகொலை செய்யப்பட்டவர்கள் சேர்க்கப்படவில்லை.

இதைவிட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், இன்னமும் சிறையில் வாடுவோர் வகைதொகை இல்லை.

இந்த படுகொலைகளினால் ஓடிய இரத்தம் வடக்கு கிழக்கில் இன்னமும் காயவில்லை. அந்த இரத்தங்களும் காயங்களும் ஆறுவத

இன்று வடக்கு கிழக்கு பிரிப்பதற்கும், வடக்கு கிழக்கு புவியியல் ரீதியாக இணைந்த தமிழ் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதை மாற்றும் வகையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி இன்று வடக்கையும் கிழக்கையும் பிரித்திருப்பது ஐக்கிய தேசியக்கட்சிதான். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் மணலாறு பிரதேசத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தி அதன் பெயரை வெலிஓயா என பெயர்மாற்றம் செய்து அப்பிரதேசத்தை அனுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தது ஐக்கிய தேசியக்கட்சிதான்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வடக்கு கிழக்கு புவியியல் ரீதியாக இப்போது இணைந்ததாக இல்லை.
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மணலாறு ( வெலிஓயா) இப்போது அனுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், எங்களுடைய பிள்ளைகளான
போராளிகளையும் முற்றாக அழித்தது மகிந்த தலைமையிலான அரசாக இருக்கலாம். ஆனால் அந்த அழிப்பிற்கு வித்திட்டு பாதை அமைத்து கொடுத்தவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைகோர்க்க நினைக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் கிழக்கில் ஏற்பட்ட பிளவே அந்த இயக்கத்தின் வீழ்ச்சிக்கு முக்கியகாரணம் என சொல்லப்படுகிறது.
அந்த பிளவை வெற்றிகரமாக செய்து முடித்தவர் ரணில் விக்கிரமசிங்கதான். ரணில் விக்கிரமசிங்காவின் ஆலோசனைப்படி ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களாக இருந்த அலிசாகிர் மௌலானா, ராஜன் சத்தியமூர்த்தி, அப்போது அரசாங்க அதிபராக இருந்த மௌனகுருசாமி உட்பட ஒரு குழுவே திட்டமிட்டு பிளவை ஏற்படுத்தினார்கள்.

( இந்த பிளவும் அதன் பின்னால் இருந்த சதியும் பற்றி தனியாக ஆராயப்படவேண்டும்)
இழந்த உரிமைகளை பெறுவதில் தமிழ் கட்சிகள், குழுக்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை.
ஆனால் தமிழர்களுக்கு உரிமையை வழங்க கூடாது என்பதில் சிங்கள பேரினவாத கட்சிகள் மிக ஒற்றுமையாகவே உள்ளன.

அது சிறிலங்கா சுதந்திரக்கட்சியாகவோ, ஐக்கிய தேசியக்கட்சியாகவோ, ஜே.வி.பியாகவோ அல்லது ஜாதிக கெல உறுமய ஆக இருக்கலாம்.

அனைத்து சிங்கள கட்சிகளுக்கும் இடையில் ஆட்சியை பிடிப்பதில் போட்டியிருந்தாலும் தமிழர்களுக்கு உரிமையை வழங்க கூடாது
என்பதில் உறுதியாக இருக்கின்றன.