இடமாற்ற கொள்கைஒன்று தயாரிக்கப்படும்போது சம்பந்தப்பட்டதொழிற் சங்கத்தின் ஆலோசனை

பெறப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் இங்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டாலும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் நலன்களை கருத்திற்கொள்ளமலும் வடக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் வழங்கப்படுகின்றது என குற்றம் சாட்டியுள்ள யாழ்.மாவட்டபொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம், இவ்வாறான இடமாற்றங்களால் முழுமையான சேவையை வழங்கமுடிவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.பொதுச்சுகாதார பரிசோதகர்களின் போராட்டம் குறித்து தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பொன்று யாழ்.சோமசுந்தரம் வீதியில்அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதன்போதே யாழ்.மாவட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் க.சதீஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அநீதியான முறையில் வழங்கப்படுகின்ற இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் நாம் ஈடுபட்டு வருகின்றோம். 2014 இற்கு முன்னர் வரையில் சீரானமுறையில் வழங்ப்பட்டுவந்த இடமாற்றம், 2015இற்கு பின்னரானகாலப்பகுதியில் முறையற்ற வகையில் வழங்கப்பட்டுவருகின்றது.இடமாற்ற சபையினால் கடந்த வருடம் இடமாற்ற கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது,பின்னர் அதே வருடத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கென தனியான இடமாற்ற கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது.
இடமாற்ற கொள்கை ஒன்று தயாரிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட தொழிற் சங்கத்தின் ஆலோசனை பெறப்படவேண்டியது அவசியமாகும்.

ஆனால் இங்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டாலும் பொதுச் சுகாதாரபரிசோதகர்களின் நன்நலன்களை கருத்திற்கொள்ளமலும் வடக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் இடமாற்றம் வழங்கப்படுகின்றது. புதிய இடமாற்றத்தின்படி 10 வருடங்களுக்குமேல் சொந்தமாவட்டத்தில் கடமையாற்றியவர்கல் கட்டாயம் வெளிமாவட்டத்திற்கு செல்லவேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படுள்ளது. இது தவிர பாதிக்கப்படுபவர்கள் மேன்முறையீடு செய்யும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இதுஉத்தியோகஸ்தர்களின் மன நிலையை பாதிக்கும் நடவடிக்கையாகும்.எனவே எமது தொழிற்சங்கத்தின் ஆலோசனை பெறப்பட்டு இடமாற்ற கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் அல்லது 2015 இற்குமுன்னர் இடம்பெற்ற இடமாற்றங்கள் போன்று வழங்கப்பட வேண்டும்.
இடமாற்றம் வழங்கப்படும் போது தாபனவிதிக்கோவைக்கு அமைய உத்தியோகஸ்தர்களின் நலன்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என அவர் மேலும்தெரிவித்தார்.