அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்ற நோயாளர்கள் இரத்த பரிசோதனைகளுக்காக தனியார்

மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனைகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனைகளுக்கு அனுப்பப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால், மருத்துவமனை பணிப்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.