மட்டக்களப்பு ஏறாவூர் கைகுண்டு ஒன்று மீட்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர் – செங்கலடி – எல்லைநகர் பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள சிறிய வீட்டுத் தோட்டத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த கைக்குண்டு தென்பட்டுள்ளது.
இதனை அடுத்து காவற்துறைக்கு தகவல் வழங்கப்பட்டு குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குண்டு தற்போது செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.